மூன்றாம் கண்.,: சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் ரெயில் மறியல்

Pages

Saturday, August 27, 2011

சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் ரெயில் மறியல்


ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 100 மாணவர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் 1/2 மணி நேரம் கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் நிலையத்தில் மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியிலும் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...