மூன்றாம் கண்.,: கடாபியின் ஏழாவது மகன் கொல்லப்பட்டார்

Pages

Monday, August 22, 2011

கடாபியின் ஏழாவது மகன் கொல்லப்பட்டார்


கடாபியின் கடைசி மகன் முன்னர் நடைபெற்ற சண்டை ஒன்றில் கொல்லப்பட்டதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி சற்று முன் உறுதி செய்தது.
திரிப்போலியில் இரண்டு உடலங்கள் வைத்தியசாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன அதில் ஒன்று கடாபியின் கடைசி மகனாக காமீஸ் உடையது இன்னொன்று அவருடைய உளவுப் பிரிவு அதிகாரி அப்துல்லா துனூஸியுடையது என்றும் கூறியுள்ளது. அத்தோடு அவர் காயம்பட்டு சிகிச்சை செய்யப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10ம் திகதி இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஏப்ரல் கடாபியின் ஆறாவது மகன் செய்ப் அல் அராப் கடாபி இறந்துள்ளார். இதுவரை கடாபியின் இரண்டு மகன்மார் போரில் மரணித்துள்ளனர். மூவர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் மூத்த மகனை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று உடனடியாக தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...