மூன்றாம் கண்.,: நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன்

Pages

Saturday, August 6, 2011

நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன்


பொது இடத்தில் முத்தமிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு டெல்லியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.விழா மேடையில் ரிச்சர்ட் கேர் ஷில்பாவை கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்தார். ஷில்பா என்னவோ சிரித்தபடி முத்தத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி பீகாரில் உள்ள சிவான் நகர நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஹரே ராம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் ரிச்சர்ட் கேர் உள்ளிட்ட 5 பேர் வரும் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...