மூன்றாம் கண்.,: 60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் கப்பல்மூழகியது

Pages

Thursday, August 4, 2011

60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் கப்பல்மூழகியது


இந்தோனேஷியால் இருந்து, குஜராத்துக்கு 60 ஆயிரம் டன் எடையுள்ள நிலக்கரியை ஏற்றி வந்த,
பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி. ராக் என்ற சரக்கு கப்பல் மும்பை துறைமுகம் அருகே வந்தபோது, கப்பலுக்குள் திடீரென கடல் நீர் புகுந்தது. சிறிது நேரத்தில், அந்த கப்பல், கடலுக்குள் மூழ்கத் துவங்கியது. கப்பலில் இருந்தவர்கள், துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர், ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு படகுகள் மூலம், விரைந்து சென்று கப்பலில் இருந்த 30 ஊழியர்களை பத்திரமாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள், ஜோர்டான், இந்தோனேஷியா, ருமேனியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...