மூன்றாம் கண்.,: ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு சறுக்கல்

Pages

Tuesday, August 2, 2011

ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு சறுக்கல்ஒருநாள் போட்டி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி ஒரு இடம் பின்தங்கி 117 புள்ளிகளுடன் இப்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  ஆஸ்திரேலிய அணி 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி (118), இந்தியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும்,  இங்கிலாந்து 5-வது இடத்திலும் உள்ளன. உலகக் கோப்பை, சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றபோதும் தரவரிசையில் சறுக்கலைச் சந்தித்துள்ளது.   இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008-09-ம் ஆண்டின்போது இந்திய அணி 17 ஒருநாள் போட்டிகளில் வெற்றியையும், 5 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்தது. இதன் மூலம் இந்திய அணி தரவரிசையில் முன்னேற்றம் கண்டது. அதேஆண்டில் ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் கண்டது. ஆனால் அது ஆஸ்திரேலியாவின் தரவரிசையைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனால் கடந்த ஓர் ஆண்டில் இந்திய அணி தான் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 9-ல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளிடம் கடைசியாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு போட்டிகளில் தோல்வியடைந்தது. இதேபோல் உலகக் கோப்பை தகுதிச்சுற்றிலும் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டது. மேலும் இந்திய அணியின் வெற்றி-தோல்வி விகிதம், உலகக் கோப்பை இறுதிச்சுற்று வரை முன்னேறிய இலங்கை, காலிறுதி வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றோடு ஒப்பிடும்போது சரிவைச் சந்தித்தது. இதுபோன்ற காரணங்களே இந்திய அணி தரவரிசையில் சறுக்கலைச் சந்திக்கக் காரணம் எனகூறப்பட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...