மூன்றாம் கண்.,: இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்

Pages

Friday, August 26, 2011

இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்


தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இலங்கையில் மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் குண்டுகள் வீசப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றார். டி.ஆர். பாலு பேசும்போது பலமுறை குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் மீரா குமார், "அண்டை நாட்டுடனான சுமுக உறவைப் பாதிக்கும் வகையில் அந்நாட்டு தலைமை பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். மதிமுகவின் கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லிங்கம், காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் செüத்ரி, ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் நிருபேந்திர நாத் ராய் உள்ளிட்டோரும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். விவாதத்தின் முடிவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது பதிலளித்துப் பேச இருந்தார். ஆனால், அதற்கு டி.ஆர்.பாலு, தம்பிதுரை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  "இது சர்வதேச விவகாரம். கேபினட் அமைச்சர்தான் பதிலளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.  "கேபினட் அமைச்சர் மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருப்பதால் இங்கு வர முடியாது' என்று பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார். ஆனால் இதை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்கவில்லை.இதையடுத்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

Share/Bookmark

1 comment:

  1. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை தான் கிரிஷ்ணாவின் பதில். மானங்கெட்ட மன்மோகன்,சீனா என்று கூறி ஏமாற்ற முயன்ற துரோகம்.பொய்களையே மக்கள் மன்றத்தில் சொல்லிய துரோகி. சோனியாவிற்காகப் பழிக்குப் பழியா, அதைச் சொல்ல வேண்டியது தானே. இன்னும் என்ன அசிங்கங்கள் தமிழருக்கு நிகழ வேண்டும் ?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...