மூன்றாம் கண்.,: யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார்

Pages

Wednesday, August 24, 2011

யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார்


முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.  இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் 1ம்  திகதி நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. யுவன் தன்னுடைய நீண்டநாள் காதலியான சுஜயா சந்திரன் என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார்.  ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின்னர் சிலகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த யுவனுக்கு சென்னையை சேர்ந்த மருத்துவர் ஷில்பா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினார். மிக ரகசியமாக இருந்து வந்த இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத் துள்ளனர். வருகிற செப்டம்பர் 1ம் திகதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...