மூன்றாம் கண்.,: நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்

Pages

Thursday, August 25, 2011

நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்

வலுவான லோக்பால் மசோதாவுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் அவருடன் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். 
ஊழலுக்கு எதிராக செயல்படக்கூடிய வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி அன்னா ஹசாரே கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  ஹசாரேவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழ் திரை உலகம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரோடு ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்தார். அதன்படி இன்று காலை அவர் 6.30 மணிக்கு விமானத்தின் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியிலிருந்து அவர் நேராக உண்ணாவிரத பந்தல் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். அங்கு ஹசாரேவோடு அமர்ந்து உண்ணாவிரம் மேற்கொள்கிறார். மாலை வரை உண்ணாவிரதம் இருக்கும் அவர் பின்னர் சென்னை திரும்புகிறார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...