மூன்றாம் கண்.,: வாஷிங்டனை உலுக்கிய பூகம்பம்

Pages

Wednesday, August 24, 2011

வாஷிங்டனை உலுக்கிய பூகம்பம்


அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அமைந்துள்ள பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பென்டகன் மற்றும் இந்திய தூதகரத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவுகோவில் 5.8 ஆக பதிவானது. இந்த பகுதியில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த பூகம்பமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 1897ம் ஆண்டு இந்த பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. அதன் பிறகு நேற்று தான் வலுவான பூகம்பம் ஏற்பட்டது.வாஷிங்டன் நகரிலிருந்து 139 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இந்த பூகம்பத்தின் விளைவாக இந்த பகுதியில் கட்டிடங்கள் அதிர்ந்தன. நியூயார்க் நகரம் வரை அதிர்வு உணரப்பட்டது. வாஷிங்டன் பகுதியில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் மற்றும் இந்திய தூதரகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. பூகம்ப அதிர்வால் இந்த கட்டிடத்திலிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 2 அணுஉலைகளும் மூடப்பட்டன. பூகம்பத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லையென்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஷிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கட்டிடத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.வாஷிங்டனிலுள்ள இந்திய கோயில்கள் மற்றும் குருதுவாராக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அவசர நிலை நிர்வாக ஆணையம் அதிபர் ஒபாமாவை சந்தித்து பூகம்ப நிலை குறித்து விளக்கமளித்தது. விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்ட அமைப்பு வசதிகள் சேதமடையவில்லையென்று இந்த ஆணையம் அதிபரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.பூகம்பத்தையடுத்து வாஷிங்டன் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்திய தூதரகம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share/Bookmark

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...