மூன்றாம் கண்.,: பார்த்தீவ் அபார 95, இந்தியா 274/7

Pages

Saturday, September 3, 2011

பார்த்தீவ் அபார 95, இந்தியா 274/7


இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பார்த்தீவ் பட்டேலும், ரஹானேயும் அளித்த சிறப்பான துவக்கத்தால் இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய நாட்வெஸ்ட் சீரிஸின் முதல் ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி பூவா-தலையா வென்று முதலில் ·பீல்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் சச்சின் களமிறங்காததால், துவக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேலும், ரஹானேயும் களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கம் முதலே இருவரும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடினர். விக்கெட் இழப்பிற்கு அணியின் எண்ணிக்கை 82 ரன்களுக்கு உயர்த்தியிருந்த நிலையில், 40 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திராவிட் 2 ரன்களுக்கு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு விராட் கோலியுடன் இணை சேர்ந்த பார்த்தீவ் பட்டேல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் அவருக்கு ஈடுகொடுத்து விராட் கோலியும் சிறப்பாக விளையாடினார். 87 ரன்களில் இருந்து இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை 190 ரன்களுக்கு உயர்த்திய நிலையில், 95 ரன்கள் எடுத்திருந்த பார்த்தீவ் பட்டேல், ஆண்டர்சன் வீசிய பந்தை கவரில் அடிக்க முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தனது சதத்தை தவறவிட்டார்.
அதன்பிறகு களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் பந்திலேயே விரலில் காயமடைந்து ஆட்டத்தை தொடர முடியாமல் வெளியேறினார். விராட்டி கோலி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிக் கொண்டிருந்த ரெய்னா இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார். அவரும் தோனியும் சேர்ந்து மேலும் அணியின் எண்ணிக்கையை 266 ரன்களுக்கு உயர்த்திய நிலையில், 29 பந்துகளில் 2 பெளண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ஆட்டமிழந்தார். தோனி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள ஆட்டக்களமானதால், வெற்றி பெற நிச்சயம் இங்கிலாந்து அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share/Bookmark

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...