மூன்றாம் கண்.,: 104 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

Pages

Monday, June 13, 2011

104 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து



தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி கொழும்பு இடையோயான கப்பல் போக்குவரத்து துவங்கியது.
மாலை 3.15 மணியளிவில் துவங்கிய விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி-கொழும்பு இடையே முதல் பயணிகள் கப்பலை இயக்கியவர் வ.உ. சிதம்பரனார். 1907-ம் ஆண்டு எம்.வீ. கலிலியோ, எம்.வி. லாவோ ஆகிய இரண்டு சுதேசி பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கினார்.104 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற அதிநவீன சொகுசுப் பயணிகள் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த கப்பலில் நல்லெண்ண தூதுவர்கள் 80 பேர், 121 பயணிகள் உள்பட 201 பேர் பயணம் செய்கின்றனர்.இந்த கப்பல் சேவை குறுகிய கால அவகாசத்தில் தொடங்கப்படுவதால் முதல் கப்பலில் பயணிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலே செல்கின்றனர்.இந்தப் பயணிகள் கப்பலை பிளமிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் இயக்குகிறது என்று துறைமுக சபை தலைவர் அ. சுப்பையா கூறினார்.விழாவில் அமைச்சர் வாசன் பேசுகையில்; இதே போன்று ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கு ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி விட்டதாகவும் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் விரைவில் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் எம்.பி.,க்கள் நெல்லை தொகுதி ராமசுப்பு, தூத்துக்குடி தொகுதி ஜெயதுரை, துறைமுக கழக தலைவர் சுப்பையா, மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...