மூன்றாம் கண்.,: அல் கொய்தா அமைப்பின் புதிய தலைவர்

Pages

Thursday, June 16, 2011

அல் கொய்தா அமைப்பின் புதிய தலைவர்


அல் கொய்தா அமைப்பின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி பொறுப்பேற்றுள்ளதாக அந்த அமைப்பு திடீரென அறிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு அல் கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஜவாஹிரி ஏற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக அல் கொய்தா அமைப்பின் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.எகிப்தைச் சேர்ந்தவர் அல் ஜவாஹிரி. அல் கொய்தா அமைப்பின் முக்கியப் புள்ளி. பின்லேடனின் வலது கரமாக திகழ்ந்தவர். இந்த நிலையில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானில் வைத்துக் கொன்று விட்டனர். இதனால் அடுத்த தலைவராக ஜவாஹிரி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வேறு ஒருவரை தலைவராக அறிவித்தது அல் கொய்தா. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பின்லேடன் உயிருடன் இருந்தபோதே அவனுக்கும், ஜவாஹிரிக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு ஜவாஹிரி விலகிப் போய் விட்டார் என்ற தகவல் பரவியது. இந்தச் சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜவாஹிரியின் வீடியோ உரை ஒன்று வெளியாகியது. அதில், பின்லேடன் கொல்லப்பட்டதை ஒத்துக் கொண்ட ஜவாஹிரி, அதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லீ்ம்கள் பழிவாங்குவார்கள், அமெரிக்காவை அழிப்போம் என்று முழங்கியிருந்தார் ஜவாஹிரி.இந்த நிலையில் ஜவாஹிரி அல் கொய்தாவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...