மூன்றாம் கண்.,: மதுரையில் மாணவியை குத்திக் கொன்ற வாலிபர் கைது

Pages

Wednesday, June 1, 2011

மதுரையில் மாணவியை குத்திக் கொன்ற வாலிபர் கைதுமதுரையில் நேற்று இளம் பெண் ஒருவரை குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் அருகே கல்லூரி மாணவி பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்டார்.திருநகர் ஆஸ்டின்பட்டி அருகே உச்சப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர்
ராமன் மகள் முருகேஸ்வரி(20). இவர் பசுமலை பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு படிக்கிறார். இவருக்கு ஒருவாரத்தில் திருமணம் நடக்க உள்ளது. முருகேஸ்வரியின் பெற்றோரும், சகோதரர்களும், வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க, நேற்று முன்தினம் சென்றனர். நேற்று காலை 11 மணிக்கு முருகேஸ்வரி அங்குள்ள கண்மாய் கரைப்பகுதிக்கு சென்றார். காலை 11.30 மணிக்கு அங்கு முருகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி., பொன்ராம், எஸ்.ஐ., ரங்கநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர் . இந்த வழக்கு தொடர்பாக மதுரை பேரையூரைச் சேர்ந்த சத்தியராஜ் (20) கைது செய்யப்பட்டார். இவர் சவுராஷ்டிரா கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் முருகேஸ்வரிக்கும் இடையே காதல் இருந்தது. சத்தியாராஜூக்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தில் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டது. இதனால் முருகேஸ்வரி சத்தியராஜை புறக்கணித்து விட்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய தயாரானார். ஆத்திரமடைந்த சத்தியராஜ் முருகேஸ்வரியை கொலை செய்தார். திருநகர் போலீசார் அவரை கைது செய்தனர்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...