மூன்றாம் கண்.,: தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடை இல்லை

Pages

Friday, June 10, 2011

தமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடை இல்லைதமிழ் ஈழக் கொடிக்கு பிரிட்டனில் தடை இல்லை என்று அந்நாட்டின் பிரபல வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அறிக்கை வழங்கியுள்ளது.
ஸ்காட்லாண்ட், வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் உட்பட பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் ஈழக் கொடியை பயன்படுத்தலாம் என்றும், அக்கொடியை வைத்திருப்பவர்களை கைது செய்து தண்டனை வழங்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரிட்டனின் தேசிய ஊடகமான பிபிசி தமிழ் ஈழக் கொடியை தமிழர்கள் ஏந்தி நிற்கும் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. கொடிக்கு தடை இருந்தால் அத்தகைய காட்சி ஒளிபரப்பாகி இருக்காது என்றும் வழக்கறிஞர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிங்களர் ஆதரவு நபர்கள், தமிழ் ஈழக் கொடி என்பது தமிழர்களின் கொடி அல்ல என்ற தவறான கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...