மூன்றாம் கண்.,: பாபா ராம்தேவ் உண்ணாவிரத நாடகம் முடிவுக்கு வந்தது

Pages

Monday, June 13, 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரத நாடகம் முடிவுக்கு வந்ததுபாபா ராம்தேவ் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.டேராடூன் இமாலயா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெதானி கூறியதாவது:
ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ், நேற்று (நேற்று முன்தினம்) தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பழங்கள் சாப்பிட்டதோடு, பழச்சாறுகளையும் குடித்தார். இதனால், தற்போது அவர் நன்றாக பேசுகிறார். அவரால் அமர்ந்திருக்கவும் முடிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வார்டிலேயே சிறிது நேரம் நடந்தார். இருந்தாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள களைப்பு, இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மருத்துவமனையிலிருந்து செல்ல விரும்புவதாக தெரிவித்தார். ஆனாலும், டிஸ்சார்ஜ் செய்வது குறித்து, நாளை (இன்று) பரிசீலிக்கலாம் என, அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு ஜெதானி கூறினார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...