மூன்றாம் கண்.,: 27 போலீசார் சஸ்பெண்ட்

Pages

Sunday, June 12, 2011

27 போலீசார் சஸ்பெண்ட்கொலை மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக, 27 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம், லாகிம்பூர்
கெரி மாவட்டத்தில் உள்ளது நிகேசான் போலீஸ் நிலையம். சில நாட்களுக்கு முன், போலீஸ் நிலைய வளாக மரத்தில், மைனர் பெண் ஒருவர் தூக்கில் தொங்கினார். விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது.எனினும், அந்த பெண்ணை போலீசார் தான் கற்பழித்து, கொலை செய்துள்ளனர் என்றும், வழக்கை திசை திருப்பும் முயற்சியாக தற்கொலை நாடகம் நடத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருமாறு, உ.பி., பா.ஜ., தலைவர் சூரிய பிரதாப் சாஹி தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றை, பா.ஜ., மேலிடம் சம்பவ இடத்திற்கு அனுப்பிஉள்ளது. இந்நிலையில், போலீஸ் நிலையத்திலேயே மைனர் பெண்ணை கற்பழித்து, கொலை செய்ததாகக் கூறி, நிகேசான் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி உட்பட 11 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல்,   சட்ட விரோதமாக வரி வசூலித்ததால், ஜான்சி மாவட்ட போலீசார் 16 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடம் சட்ட விரோதமாக, வரி வசூலித்ததை உயர் அதிகாரி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து, போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஒருவரும், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும், 12 போலீசார் மற்றும் ஜீப் டிரைவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...