மூன்றாம் கண்.,: கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி கருணாநிதி குற்றச்சாட்டு

Pages

Monday, June 13, 2011

கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி கருணாநிதி குற்றச்சாட்டு



திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கடித வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் ஜூன் 10-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களின் நகல்கள் உடனடியாக செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும் பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்க விரும்புகிறார்கள் என்று கூறியதால் அவர்களைச் சந்தித்தேன். வழக்கத்தைவிட அதிகமானோர் குழுமியிருந்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பான கேள்விகள் இருந்தால் கேட்குமாறு கூறினேன். ஆனால், சி.பி.ஐ. அமைப்பை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா, கனிமொழி மீது மத்திய அரசால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று திருவாரூரில் பேசினீர்களே, அது குறித்து தீர்மானத்தில் இல்லையே, கூடா நட்பு என்று சொன்னது யாரைப் பற்றி, பெரும்பான்மையான திமுக தொண்டர்கள் காங்கிரஸýடன் உறவைத் தொடரக் கூடாது என்று விரும்புகிறார்களே, காங்கிரஸின் அதிகாரபூர்வ பத்திரிகையில் தமிழக தேர்தல் தோல்விக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளதே, பாஜகவுடன் செல்லப் போவதாக தில்லியில் சொல்கிறார்களே, தயாநிதி மாறனை நீங்கள் ஆதரிக்கவில்லையா, திமுகவை காங்கிரஸ் என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுகிறார்களே என்பது போன்ற கோள்விகளைத் தான் செய்தியாளர்கள் கேட்டனர்.மொத்தம் கேட்கப்பட்ட 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸýக்கும் திமுகவுக்கும் உள்ள உறவை துண்டிக்க வேண்டும், காங்கிரûஸ விமர்சித்து நான் எதையாவது கூறி, அதனைப் பெரிதுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்கப்பட்டதாக கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...