மூன்றாம் கண்.,: ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு சீமான் கைதாவாரா

Pages

Friday, June 3, 2011

ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு சீமான் கைதாவாராஜுன் 3 (டிஎன்எஸ்) நாம் தமிழர் கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கற்பழிப்பு உள்ளிட்ட ஆறு
பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால் சீமான் கைதாவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வளசரவாக்கத்தில் வசித்து வருக் விஜயலட்சுமியிடமும், அவரது குடும்பத்தாரிடமும் போலீஸார் நேற்று (ஜுன் 2) அவருடைய வீட்டில் விசாரனை நடத்தினார்கள். கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தனக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், இது பின்னர் காதலாக மாறியதாகவும் விஜயலட்சுமி போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.மேலும் சீமான் தன்னிடம் பழகியதற்கு ஆதரம் இருப்பதாகவும் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். தற்போது ஆதாரம் எதையும் போலிஸாரிடம் கொடுக்காத விஜயலட்சுமி உரிய நேரத்தில் காவல் துறையில் ஆதாரத்தை தருவேன் என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட போலீஸார் தற்போது விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. (டிஎன்எஸ்)

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...