மூன்றாம் கண்.,: நிருபர் ஜோதிர்மய் டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சோட்டா ராஜன் தாதா கும்பல் கைது

Pages

Monday, June 27, 2011

நிருபர் ஜோதிர்மய் டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சோட்டா ராஜன் தாதா கும்பல் கைது


மும்பையைச் சேர்ந்த மிட்-டே பத்திரிகையின் மூத்த கிரைம் நிருபர் ஜோதிர்மய் டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ராமஸ்வரத்தில் 3 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.அண்டர்வோர்ல்ட் தாதாக்கள் பற்றிய பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டவர் மிட் டே பத்திரிக்கையின் மூத்த நிருபர் ஜோதிர்மய் டே. கடந்த 11ம் தேதி பட்டப் பகலில் போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், டேவை சோட்டா ராஜன் தாதா கும்பல் தான் தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக முதலில் 4 பேரை கைது செய்தனர் மும்பை போலீசார். இந் நிலையில் இந்தக் கொலையின் முக்கிய குற்றவாளிகளை மும்பையிலிருந்து வந்த தனிப்படை போலீசார் ராமேஸ்வரத்தில் வைத்து கைது செய்தனர். கொலையைச் செய்த இக் கும்பல் கடந்த இரு வாரமாக ராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்தது. இதையடுத்து மும்பையில் இருந்து வந்த போலீஸ் படை இவர்களைப் பிடித்தது. இவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் மும்பையிலிருந்தும் ஒருவர் சோலாப்பூரிலும் கைது செய்யப்பட்டனர்.எண்ணெய் கடத்தல், எண்ணெயில் கலப்படம் செய்து வந்த சோட்டா ராஜன் கும்பலின் செயல்பாடுகள் குறி்த்து மிட்-டே பத்திரிக்கையில் எழுதி வந்ததால் அவரை அந்தக் கும்பல் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில், இந்தக் கொலையில் இப்போது கைது செய்யப்பட்ட 7 பேரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் மிகச் சிறந்த பணிக்காக ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளேன் என்றார்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...