மூன்றாம் கண்.,: பின்லேடன் கொல்லபட்டதற்கு இந்தியர்கள் ஆதரவு

Pages

Thursday, June 16, 2011

பின்லேடன் கொல்லபட்டதற்கு இந்தியர்கள் ஆதரவு


 பயங்கரவாதி பின்லேடன் கொல்லபட்டது சரிதான் என 95 சதவீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  இப்போஸஸ் எனும் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 22 பெரிய நாடுகளில் ஆய்வினை
மேற்கொண்டது.இதில் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது அமெரிக்க கொமாண்டோ படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்கா, போலந்து, ஸ்பெயின்,மெக்ஸிகோ, இந்தோனேஷியா உள்ளிட்ட 22 நாடுகளில் 18 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களிடம் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கருத்து கேட்கப்பட்டது. இதில் பெருமளவானோர் கொல்லப்பட்டது சரியானது தான் என ஆதரவு தெரிவித் துள்ளனர். இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் 95 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது உலகளாவில் 41 சதவீதம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.63 சதவீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்  உலகளவில் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மீதம் உள்ளவர்கள் பின்லேடன் கொலையால் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...