மூன்றாம் கண்.,: ஒசாமா பின்லேடனை காட்டி கொடுத்த தலிபான்

Pages

Wednesday, June 1, 2011

ஒசாமா பின்லேடனை காட்டி கொடுத்த தலிபான்ஒசாமா பின்லேடனை தலிபான் இயக்கத்தை சேர்ந்த ஒருவரே காட்டி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா
பின்லேடனை அமெரிக்க படை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டு கொன்றது. ஒசாமா பின்லேடன், அபு அஹமத் அல் குவைடி என்பவர் தொலைபேசியை ஒட்டு கேட்டதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பின்லேடனை அவரது நெருங்கிய கூட்டாளி முல்லா அப்துல் பாரடர் என்பவர் காட்டி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் இயக்க தலைவர் முல்லா ஒமரின் நெருங்கிய உறவினரான முல்லா அப்துல் பாரடர் கடந்த வருடம் கராச்சியில் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகும் முன்பு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பின்லேடன் குறித்து முல்லா அப்துல் பாரடர் தகவல் கூறியிருக்கக்கூடும் எனவும், ஒசாமா பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ ஆப்கனிலிருந்து படைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பாரடரிடம் அமெரிக்க கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லா ஒமர் மற்றும் பின்லேடனுடன் மிகவும் நெருக்கமாயிருந்தவர் முல்லா அப்துல் பாரடர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,"பின்லேடனுக்கும், அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒரு சிலருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...