மூன்றாம் கண்.,: ஈழத்தில் தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.

Pages

Saturday, June 25, 2011

ஈழத்தில் தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.
ஈழத்தில் புலிக்கொடி பறக்கும்! தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்! மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு புலிகள் மீதான தடை குறித்து மதிமுக மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார். அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள். இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை. புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும் ….. தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும். இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா? எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும்….பல லட்சம் தமிழ்மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...