மூன்றாம் கண்.,: சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான அதிரடி நடவடிக்கை

Pages

Sunday, June 26, 2011

சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான அதிரடி நடவடிக்கை
சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 40 நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 60 பேரில் 14 பேர் ரவுடி மாமூல் வசூலிப்பவர்கள் அடங்குவர். கொலை வழக்கில் ஈடுபட்ட 15 பேரும், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 13 பேரும், திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்கப் பட்டுள்ளனர். இது தவிர விபச்சார புரோக்கர் ஒருவர் விசிடி வியாபாரம் செய்த 3 பேரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீதான கடுமையான நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...