மூன்றாம் கண்.,: மும்பையில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Pages

Saturday, June 11, 2011

மும்பையில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை56 வயதான மூத்த பத்திரிகையாளரான தேயை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு நபர்கள் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிவிட்டதாக போலீஸ் அதிகாரி ரஜ்னிஷ் சேத்
தெரிவித்தார். மும்பையின் புறநகரில் உள்ள பொவாய் பகுதியில் ஜன நடமாட்டம் மிகுந்த ஹிரநந்தானி என்ற இடத்தில் தே மோட்டார் சைக்கிகளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்புறத்தில் இருந்து மர்ம நபர்கள் அவரை ஐந்து முறை சுட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, மும்பையில் செயல்படும் நிழல் உலக குற்றக் குழுக்கள் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் பெருமளவில் செய்திகளை வெளியிட்டு வந்த தே, நிழல் உலக குற்றங்கள் தொடர்பாக இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர் தே கொல்லப்பட்டதற்கு இந்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...