மூன்றாம் கண்.,: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தைத் தகர்க்க மாவோயிஸ்ட்டுகள் முயற்சி

Pages

Thursday, June 16, 2011

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தைத் தகர்க்க மாவோயிஸ்ட்டுகள் முயற்சி


ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தைத் தகர்க்க மாவோயிஸ்ட்டுகள் முயற்சி செய்துள்ளனர். ஜெனரேட்டர் ஒன்றையும் எரித்துள்ளனர். பிகார் மாநிலத்தில்
மாவோயிஸ்ட்டுகளின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜகதீஷ் மாஸ்டர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவோயிஸ்ட்டுகள் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை நள்ளிரவு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலமாவு மாவட்டத்தின் முகம்மதுகன்ஞ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்க்க மாவோயிஸ்டுகள் முயற்சி செய்துள்ளனர். இதில் தண்டவாளத்தை இணைக்கும் சிமெண்ட் பலகைகள் சேதமடைந்தன. மேலும் அருகிலிருந்த தனியார் செல்போன் நிறுவனத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் ஜெனரேட்டரையும் எரித்தனர். சேதமடைந்த ரயில் பாதை 15 நிமிடங்களில் சரிசெய்யப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடரப்பட்டதாக மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அனூப் டி.மேத்யு தெரிவித்தார்.மாவோயிஸ்டுகளின் பாதிப்பு உள்ள பகுதிகளில் பேருந்துகள் மற்றும் லாரிகளின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களைத் தடுக்கக் கூடுதல் போலீஸôர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...