மூன்றாம் கண்.,: ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கருணாநிதி விசாரித்தறிந்தார்

Pages

Thursday, June 16, 2011

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கருணாநிதி விசாரித்தறிந்தார்சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தும், திமுக தலைவர் கருணாநிதியும் தொலைபேசியில் பேசும்போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கருணாநிதி விசாரித்தறிந்தார்.

வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகளை பார்த்திருப்பீர்கள், உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்வது முக்கியம். வேறு எதையும் பெரிதாக கருத்தில்கொள்ள வேண்டாம் என ரஜினிகாந்திடம் கருணாநிதி தெரிவித்தார் என திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்தார் என்றும் திமுகவின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் முதல் பேச்சாக முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது ஜெயலலிதா தமிழக முதல்வரானதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...