மூன்றாம் கண்.,: சுதந்திரப்போராளி வாஞ்சிநாதனால் கலெக்டர் ஆஷ் துரை கொலைப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன

Pages

Friday, June 17, 2011

சுதந்திரப்போராளி வாஞ்சிநாதனால் கலெக்டர் ஆஷ் துரை கொலைப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் படுகொலைச் சம்பவமென கருதப்படும், பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் துரை, என்றறியப்படும்,
ராபர்ட் வில்லியம் டெஸ்கூர்ட் ஆஷ் என்ற அதிகாரி, சுதந்திரப்போராளி வாஞ்சிநாதனால், மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு( ஜூன் 17) நூறாண்டுகள் ஆகின்றன. இந்தக் கொலைச் சம்பவம் குறித்தும், வாஞ்சியின் வாழ்க்கை குறித்தும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி, அவர்களுக்கு, கொல்லப்பட்ட ஆஷ் அவர்களின் பேரன், அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், இந்தக் கொலை சம்பவம் குறித்து நினைவு கூர்ந்து எழுதியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன. இந்த மின்னஞ்சல் குறித்து பேராசிரியர் வெங்கடாசலபதி  தெரிவித்த கருத்துக்களில், ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட நூறாண்டு, வெள்ளிக்கிழமை, நிறைவு பெறும் தருணத்தில், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு ஆஷின் பேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில், நடந்தவைகள் மறக்கப்படவேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்களால் ஒடுக்கப்படுவர்களாக இருந்தாலும், அரசியல் உக்கிரம்பெறும்போது, சில சமயம் பெரும் பிழைகளை செய்யும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன என்றும் அவர் எழுதியிருந்ததாக வெங்கடாசலபதி தெரிவித்தார். ஆனால், வாஞ்சிநாதனைப் பற்றி ஆஷ் துரையின் பேரன் பெரிய கசப்புணர்வு கொண்டிருக்கவில்லைஆனால் ஆஷின் குடும்பத்தினரின் இந்த கருத்தைப் பகிர்ந்துகொள்ள வாஞ்சி நாதனின் குடும்பத்தினர் எவரும் இன்று உயிருடன் இல்லை. அவருக்கிருந்த ஒரே ஒரு பெண் குழந்தையும் இறந்துவிட்டது. அவரது மனைவி பொன்னம்மாள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...