மூன்றாம் கண்.,: உத்தரபிரதேசத்தில் தொடரும் பெண் கற்பழிப்பு

Pages

Monday, June 20, 2011

உத்தரபிரதேசத்தில் தொடரும் பெண் கற்பழிப்புஉத்தரபிரதேசத்தில் 5 பேர் சேர்ந்து பெண்ணை கற்பழித்து உயிரோடு எரித்துக் கொன்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் குர்சகாய் கஞ்ச் அருகே உள்ள கட்வா பசர்க் என்ற பகுதியை
சேர்ந்த 14 வயது சிறுமியை 2 வாலிபர்கள் கற்பழிக்க முயன்றனர். ஆனால் சிறுமி கூச்சலிட்டதால், அவர்கள் இருவரும் கத்தியால் சிறுமியின் கண்ணை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்தம் வழிந்தோட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அந்த சிறுமிக்கு பார்வை பறிபோய் விட்டது. இதற்கிடையே ராணிப்பூர் பிலாடி என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை சதிசிங் என்பவர் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்தார்.இந்த இரு கற்பழிப்பு சம்பவங்களும் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பெண்களுக்கு மாயாவதி ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளது. இந்த நிலையில் உத்தரபிர தேசத்தில் நேற்றிரவு மேலும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார். இடா நகரில் இந்த கொடூரம் நடந்தது. 33 வயதான அந்த பெண்ணை 5 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். பிறகு அவரை 5 வாலிபர்களும் உயிரோடு தீ வைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர். கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை இடா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். எரித்து கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. உத்தரபிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தலித் இனத்தை சேர்ந்தவர்கள். மாயாவதி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க.வும் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளது. இது மாயாவதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...