மூன்றாம் கண்.,: தமிழக அமைச்சரவை திடிர் மாற்றம்

Pages

Monday, June 27, 2011

தமிழக அமைச்சரவை திடிர் மாற்றம்
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ முகம்மது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இவரது பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்ததால், இதுவரை அந்த பொறுப்பை சுற்றுச்சூழல் அமைச்சர் டி.கே.எம் சின்னையா கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தொழில்துறை அமைச்சராக இருந்த சி. சண்முகவேலு ஊரக தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
ஊரக தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
* சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
* விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த என்.ஆர். சிவபதி கால்நடைத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
* கால்நடைத்துறை அமைச்சராக இருந்த சி. கருப்பசாமி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...