மூன்றாம் கண்.,: தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்படுவார்

Pages

Tuesday, June 7, 2011

தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்படுவார்2ஜி ஊழலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன் அமைச்சரவை மாற்றத்தின்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்படுவார் என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை தயாநிதி மாறன் இன்று சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.மேலும் ஏர்செல்-மேக்ஸிஸ் உடன்பாடு தொடர்பாக எஃப்ஐஆரில் மாறனின் பெயர் இடம்பெறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைத்தொடர்பு ஊழலில் ஆ.ராசா, கனிமொழிக்குப் பிறகு 3-வது திமுக பிரமுகராக தயாநிதி மாறனின் பெயர் இடம்பெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏர்செல் முன்னாள் தலைவர் ஜி.சிவசங்கரனிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்க தயாநிதி மாறன் தன்னை வற்புறுத்தியதாக சிபிஐயிடம் சிவசங்கரன் கூறியதாகத் தெரிகிறது.

டிஸ்கி:
வளர்ந்து வரும் நமது வலைப்புவிற்கு உங்கள் ஆதராவை Follower ராய் இணைவதன் மூலம் வெளிப்படுத்தலாமே

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...