மூன்றாம் கண்.,: அமைச்சர்கள் அனைவறும் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்

Pages

Tuesday, June 7, 2011

அமைச்சர்கள் அனைவறும் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்

ஊழல் பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் காங்கரஸ் அதை சமாளிக்க புதிய நாடகம். மத்திய அரசில் அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் தங்களுடைய, தங்கள்
மனைவி, உற்றார், உறவினர் உள்ளிட்ட தன்னைச் சார்ந்துள்ள குடும்ப உறவுகள் அனைவரின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்களுக்கான நடத்த விதிமுறைகளின் (Code of Conduct for Ministers) கீழ் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இந்த விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் தனது அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் உறுப்பினர்களாக நீங்கள், அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளின் கீழ், உங்களுடைய சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமரின் உத்தரவிற்கிணங்க உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்என்று மத்திய அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் அமைச்சர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அமைச்சரவையின் உறுப்பினராக உள்ள நீங்கள், அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளின்படி, உங்களுடைய சொத்துக்கள், உள்ள கடன்கள், வணிக நலன்கள், தங்களின் மனைவி, தங்களைச் சார்ந்துள்ளவர்களின் வணிக நலன்கள், அயல்நாட்டு அரசு அல்லது அயல்நாட்டு அமைப்புடன் உள்ள தொடர்புகள் ஆகியனவற்றை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் நன்னடத்தை விதிமுறைகளின்படி, அசையா சொத்துக்கள், பங்குகளிலும், பத்திரங்களிலும் உள்ள முதலீடுகள், ரொக்க கையிருப்பு, நகைகள் ஆகியவற்றையும், கடைசி நிதியாண்டில் வருமான வரித்துறைக்குத் தாக்கல் செய்த விவரங்களையும் அளிக்க வேண்டும். யாரும் உண்மையான விவரங்களை தரபோவது கிடையாது. மூன்றாம் கண்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...