மூன்றாம் கண்.,: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகக் குள்ளமான மனிதர்

Pages

Monday, June 13, 2011

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகக் குள்ளமான மனிதர்உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற பெருமையை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார்.கடந்த 2010ல், நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திர தபா மகர் என்பவர்,
உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்று அறிவிக்கப்பட்டார். 67 செ.மீ., உயரமே கொண்ட அவரது பெயர், கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ என்ற தென்பகுதித் தீவைச் சேர்ந்த ஜன்ரி பலாவிங், 18, என்பவர் தான், உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது உயரம் 59.93 செ.மீ.,இதையறிந்த கின்னஸ் நிறுவனம், தனது நிபுணர்கள் மூலம் அவரது உயரத்தை நேரில் அளந்து உறுதி செய்தனர்.பலாவிங்குக்கு இரண்டு வயதானபோது, அவர் அடிக்கடி நோய்வாய்ப்படலானார். அவரது பெற்றோர், மருத்துவர்களிடம் பரிசோதித்த போது அவரது வளர்ச்சி நின்றுவிட்டது தெரியவந்தது. அதன் பின் தான் அவர்களுக்கு தங்களது மகனின் நிலவரம் தெரியவந்தது.தற்போது, கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற பெருமையை பலாவிங் பெற்றுள்ளார்.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...