மூன்றாம் கண்.,: கங்கை நதியை காப்பாற்ற சுவாமி நிகாமானந்த் மரணம்

Pages

Tuesday, June 14, 2011

கங்கை நதியை காப்பாற்ற சுவாமி நிகாமானந்த் மரணம்சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்றுமாறு இரண்டரை மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்துவிட்டார்.


கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் யோகா குரு பாபா ராம்தேவ். அவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சந்தித்ததால் அவரது உண்ணாவிரதம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் கங்கை நதியை காப்பாற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்த் டேராடூனில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கங்கை நதி மாசுபடுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரித்வாரில் நிகாமானந்த் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 73 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நிகாமானந்தின் உடல் மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்து இன்று காலை கொண்டுசெல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...