மூன்றாம் கண்.,: பலாத்காரம், பாலியல் அல்லாத கொடுமைகள் உலக அளவில் இந்தியா 4வது இடம்

Pages

Wednesday, June 15, 2011

பலாத்காரம், பாலியல் அல்லாத கொடுமைகள் உலக அளவில் இந்தியா 4வது இடம்


வன்கொடுமை, பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள் நடைபெறுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
சமீபத்தில் உலக அளவில் மகளிர் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடம் வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து காங்கோ, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. சர்வதேச பெண்களுக்குக்கான சட்ட அமைப்பு மற்றும் மகளிர் உரிமை கழகத்தின் சார்பில் தாம்சன் என்பவரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் 3 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து கண்டங்களில் உள்ள 213 நிபுணர்களால் பெண்களுக்கு எதிராக சுகாதாரம், பாலியன் பலாத்காரம், பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான கொடுமைகள், மதம் சார்ந்த அடக்குமுறை, பொருளாதார ரீதியிலான கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இந்தியாவின் உள்த்துறை செயலராக இருந்த மதுக்கர் குப்தா தெரிவித்த அறிக்கையில் இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பேர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறும் கொடுமைகளில் 40 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய திருமணம், கட்டாய வேலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடைபெறுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 50 மில்லியன் ஆகும்.







Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...