மூன்றாம் கண்.,: மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

Pages

Sunday, June 19, 2011

மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவை ஆஜராகும்படி அமெரிக்க நீதிமன்றமொன்று சம்மன் அனுப்பியுள்ளது.


"சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அமெரிக்கப் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர்கள் இலங்கை அதிபரிடம் 3 கோடி டாலர் (ரூ. 134 கோடி) நஷ்டஈடு கோரியுள்ளதாகத் தெரிகிறது. ஹேக் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அதிபருக்கான, சம்மன் இலங்கை நீதியமைச்சகத்தின் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற சட்டவிரோதச் செயல்களால் இறந்த 3 மாணவர்களின் பெற்றோர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழியில் பதுங்கியிருந்த தங்களது உறவினர்கள் எறிகணைத் தாக்குதலில் பலியானதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.ஏற்க மறுப்பு இதனிடையே இந்த சம்மனை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்க நீதிமன்றம் முன் தான் ஆஜராக முடியாதென்றும் ராஜபட்ச அறிவித்துள்ளார். அதிபர் என்ற முறையில் தனக்கு விலக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது நிலையை தெரிவித்து ராஜபட்ச, கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை நீதித்துறை செயலாளர் சுஹதா கமலத் தெரிவித்தார்.

Share/Bookmark

1 comment:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது. உங்கள் செய்திகளை கீழே பதியவும்.

    Share

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...