மூன்றாம் கண்.,: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இந்தியப் பெண் வக்கீல் அமெரிக்காவில் கைது

Pages

Friday, June 17, 2011

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இந்தியப் பெண் வக்கீல் அமெரிக்காவில் கைதுபணம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வக்கீல் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவரது பெயர் ரீமா பஜாஜ். 25 வயதாகும் இவர் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சைகமோர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். வக்கீலாக பணியாற்றி வருகிறார்.கடந்த ஆண்டுதான் இவர் வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்ற ஆரம்பித்தார். இவர் மீது டிகால்ப் கவுன்டி கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பணம் வாங்கிக் கொண்டு செக்ஸை விற்றதாகவும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.50 டாலர் பணம் வாங்கிக் கொண்டு தனது வக்கீல்அலுவலகத்திற்கு அருகே ஒரு ஆணுடன் இவர் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்தக் குற்றச்சாட்டு கூறுகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ரீமா பஜாஜ் மறுத்துள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...