மூன்றாம் கண்.,: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வரும்

Pages

Sunday, June 26, 2011

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வரும்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தலிபான்களுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஒசாமா-பின்-லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் தலிபான்களின் போக்கில் மாற்றம் தெரிகிறது. மேலும்,
அமெரிக்காவும் தான் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3000 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அல்-கொய்தா இயக்கத்தினால் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதால், அல்-கொய்த இயக்கத் தலைவர் ஒசாமா-பின்-லேடனுக்கு புகலிடம் கொடுத்து வந்த தலிபான்களுடன் போரிடத் தொடங்கியது அமெரிக்கா. சில மாதங்களில் அப்பொழுது ஆட்சியில் இருந்த தலிபான்களை ஆட்சியில் இருந்தும் அகற்றியது. எனினும், ஒசாமா-பின்-லேடனை பிடிக்க முடியாததால்,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடர்ந்து போரிட்டு வந்தது. 10 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்டு வந்ததால் அமெரிக்க வீரர்கள் களைத்து இருந்ததாலும், பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து வந்ததாலும், அமெரிக்கா,ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. இந்நிலையில், கடந்த மே மாத துவக்கத்தில் ஒசாமா-பின்-லேடன் கொல்லப்பட, தற்பொழுது தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. தலிபான்களும் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புவது, அவர்களுடைய சமீபத்திய செயல்பாடுகளில் இருந்து தெரிகிறது. இதுவரை, ஆப்கானிஸ்தானில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும், உடனே தலிபான்கள் அதற்குப் பொறுப்பு ஏற்பார்கள். அல்லது அது குறித்து அறிக்கை எதுவும் வெளிடாமால் இருப்பார்கள். ஆனால், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மருத்துவமனை ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தனர். இது தலிபான்கள், தாங்கள் இன்னும் தாக்குதலில் ஈடுபடுவதாக அமெரிக்கா நினைக்கக் கூடாது என்பதற்காக வெளியிட்ட அறிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...