மூன்றாம் கண்.,: சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.

Pages

Friday, June 24, 2011

சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.


தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் 883 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சச்சின் 874 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த முறை ஐசிசி தரவரிசையை வெளியிட்டபோது சச்சினும், காலிஸýம் முதலிடத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரில் விளையாடாததே சச்சினின் தரவரிசை சரிவுக்குக் காரணம். அவர் பங்கேற்காத ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ஒரு சதவீத அளவுக்கு ரேட்டிங் புள்ளிகளை இழப்பார். இலங்கை வீரர் சங்ககரா 3-வது இடத்திலும், வீரேந்திர சேவாக் 6-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ராகுல் திராவிட் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் 20-வது இடத்தைப் பிடித்தார். இந்திய வீரர் லட்சுமண் 5 இடங்கள் பின்தங்கி 13-வது இடத்தையும், தோனி 2 இடங்கள் பின்தங்கி 38-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சுரேஷ் ரெய்னா 61-வது இடத்தில் உள்ளார்.பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 3 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினும், இங்கிலாந்தின் கிரீம் ஸ்வாண், ஆண்டர்சன் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் 3-வது இடத்திலும் உள்ளனர்.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...