மூன்றாம் கண்.,: டில்லி வந்தார் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திகிறார்

Pages

Monday, June 13, 2011

டில்லி வந்தார் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திகிறார்


டில்லி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்., - பா.ஜ., - இடதுசாரி என மூன்று தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர். காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாட்டில் இருக்கும் சூழ்நிலையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கை மட்டுமே இன்று ஜெயலலிதா சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை அ.தி.மு.க., பெற்றதை அடுத்து, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பதவி பொறுப்பேற்று, அதிகாரிகள் இடமாற்றம், கவர்னர் உரை, சட்டசபை கூட்டத்தொடர் உள்ளிட்ட முதற்கட்ட விஷயங்களை, முதல்வர் ஜெயலலிதா முடித்தார்.பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க திட்டமிட்ட அவர், நேற்று டில்லி வந்து சேர்ந்தார். சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலமாக மதியம் 3.30 மணியளவில் டில்லிக்கு முதல்வர் வந்து சேர்ந்தார்.முதல்வரான பிறகு மேற்கொள்ளும் முதல் டில்லி பயணம் என்பதால், இங்குள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். மேள தாளம் முழங்க முதல்வரை, அ.தி.மு.க.,வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர்.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...