மூன்றாம் கண்.,: பாகிஸ்தானில் ராணுவவீரர் அப்பாவி இளைஞனை சுட்டுக்கொன்ற வீடியோகாட்சி மனித உரிமை அமைப்பு கண்டனம்

Pages

Friday, June 10, 2011

பாகிஸ்தானில் ராணுவவீரர் அப்பாவி இளைஞனை சுட்டுக்கொன்ற வீடியோகாட்சி மனித உரிமை அமைப்பு கண்டனம்


பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை பாரா மிலிட்டரி படையினர் கொடூரமாக தாக்கி,துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி. சானல் ஒன்று
நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. இது குறித்து பிரதமர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகி்ஸ்தானில் கராச்சி நகரில் நகரில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரேஞ்சர் எனும் பிரிவைச் சேர்ந்த பாரா மிலிட்டரி படையினர் ஒரு இளைஞனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் ஷர்பராஸ்ஷகா என்பதும் கொள்ளையடிக்கும் திட்டத்தில் நடமாடியதாக கூறப்பட்டது. உடனே அந்த இளைஞனை தீவிர விசாரணை நடத்தாமல் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் ஒரு ராணுவவீரர் துப்பாக்கியால் அந்த இளைஞனின் மார்பில் அருகே வைத்து சுட்டுக் கொன்றார்.இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.. இந்த கொடூர சம்பவத்தினை அந்நாட்டு தனியார் டி.வி.‌சானல் ஒன்று ஸ்டிங்க் ஆபரேசன் மூலம் நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவத்தினர் பிடிக்கப்பட்ட போது அந்த இளைஞன் அவர்களிடம் சுட வேண்டாம் என கெஞ்சியுள்ளார். நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சிகள் அனைத்து டி.வி. சானல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தற்போது பாகிஸ்தானில் பார்லிமென்ட் கூட்டம் நடந்து வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் வீடியோ காட்சி குறித்தும் சம்பந்தபட்டவர்கள் கைது செய்ய வலியுறுத்தினர் .இது குறித்து பிரதமர் யுசுப்ராஸா கிலானி இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத எதிர்ப்பு கோர்டில் விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் முடிவினை அறிவிக்கும் என தெரிவித்தார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...