மூன்றாம் கண்.,: செய்தியாளர் ஜோதிர்மாய் படுகொலை சோனியா காந்தி கடும் கண்டனம்

Pages

Sunday, June 12, 2011

செய்தியாளர் ஜோதிர்மாய் படுகொலை சோனியா காந்தி கடும் கண்டனம்மும்பையில் மிட்டே இதழின் கிரைம் செய்தியாளர் ஜோதிர்மாய் தேய், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டப்பகலில் ஜோதிர்மாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற கொடூரமான செயல்களை நாகரீகமடைந்த சமூகம் ஏற்காது. பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசு, இந்த வழக்கில் தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டனை கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர். 56 வயதான ஜோதிர்மாய் கடந்த 20 ஆண்டுகளாக கிரைம் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். பல நிழலுக தாதாக்கள், கிரிமினல்கள் குற்றவாளிகள் குறித்த செய்திகளை அவர் தொடர்ந்து கொடுத்தபடி இருந்தார். இதற்காக அவர் பல துணிச்சலான காரியங்களிலும் ஈடுபட்டுள்ளார். அவரை மும்பைப் புறநகர்ப் பகுதியான போவாய் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டுத் தப்பியது. மோட்டார் சைக்கிளில் ஜோதிர்மாய் வந்தபோது இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...