மூன்றாம் கண்.,: பின்லேடன் உடலை கடலில் தேடும் பணியில் பில் வாரன் அமெரிக்கர்

Pages

Sunday, June 12, 2011

பின்லேடன் உடலை கடலில் தேடும் பணியில் பில் வாரன் அமெரிக்கர்




ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றனர். ஒஸாமாவின் உடலை கடலில்
அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்க ராணுவம் பின்னர் அறிவித்தது.ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதராங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஒஸாமாவின் உடலை கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர்.கடலில் புதையலை கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களை கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார்.ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலை தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார். தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்கு காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...