மூன்றாம் கண்.,: மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்ட‌ம் தொடங்க‌ப்படு‌ம் த‌மிழ அரசு அ‌றிவிப்பு

Pages

Friday, June 3, 2011

மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்ட‌ம் தொடங்க‌ப்படு‌ம் த‌மிழ அரசு அ‌றிவிப்பு
செ‌ப்ட‌ம்ப‌ர் 5ஆ‌ம் தே‌தி முத‌ல் பெ‌‌ண்களு‌க்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்ட‌ம் தொடங்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழ அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது. 14வது ச‌ட்ட‌ப்பேரவை
கூ‌ட்ட‌த்‌தி‌ல் ஆளுந‌ர் ப‌ர்னாலா ஆ‌‌ற்‌‌றி உரை‌யி‌ல், இந்த அரசு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பேரறிஞர் அண்ணா‌வின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மகளிருக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கும். 2011-2012 ஆம் ஆண்டு சுமார் 25 இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும். பொது விநியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய சுமார் 1.83 கோடி குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் இத்திட்டத்தினால் படிப்படியாகப் பயனடைவர். முதலமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளபடி மீதம் உள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் அடுத்த ஒன்றரை ஆண்டில் இந்த அரசால் நிறைவேற்றப்படும் எ‌ன்று ஆளுந‌ர் உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...