மூன்றாம் கண்.,: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அடுத்து கைது யார்?

Pages

Monday, June 6, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அடுத்து கைது யார்?



ஏர்செல் மாஜி ஓனரான சிவசங்கரனிடம் சி.பி.ஐ., இன்று விசாரணை நடத்தியது. இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் முக்கிய விஷயங்களை தெரிவித்திருப்பதாகவும், இது
முக்கிய தன்மை கொண்டதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு தொலை தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தவர் சிவசங்கரன். அவர் 2ஜி அலைக்கற்றை உரிமை கேட்டு தொலைத் தொடர்பு துறையிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு உரிமம் எதுவும் கொடுக்கப்படவில்லை. பல முறை கேட்டும் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனால் சிவசங்கரன் தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு விற்று விட்டார். அவர் டிஸ்னெட் வயர்லஸ் என்ற பெயரை ஏர்செல் என்று மாற்றினார். அதன் பிறகு ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் உடனடியாக கிடைத்தன. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தொழில் அதிபர் சிவசங்கரனை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. அதை ஏற்று இன்று (திங்கட்கிழமை) சிவசங்கரன் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார். 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அவரிடம் சி.பி.ஐ. பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்தது. தான் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் வரை தள்ளப்பட்டேன் என்றும், இதற்கு ஒரு சிலர் காரணமாக இருந்தனர் என்றும் கூறியுள்ளார். அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. சிவசங்கரனின் வாக்குமூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் பலருக்கு நெருக்கடி வர வாய்ப்பு இருக்கிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன், இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ,அடுத்து தயாநிதி மாறன் கைதவார் என்று கூறப்படுகிறது.




Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...