மூன்றாம் கண்.,: நேட்டோப் படை ஆளில்லா ஹெலிகொப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டது

Pages

Thursday, June 23, 2011

நேட்டோப் படை ஆளில்லா ஹெலிகொப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதுலிபியாவில் நேட்டோப் படைகளுக்குச் சொந்தமான ஆளில்லா ஹெலிகொப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.
லிபியாவில் முஅம்மர் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பலமாதங்களாக மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் நேட்டோவுக்குச் சொந்தமான ஆளில்லா அபாச் ரக ஹெலிகொப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் கடாபியின் ஆதரவுப் படைகளுடன் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் உள்ள லிபியாவுக்கான நேட்டோப் படைகளின் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட இக்ஹெலிகொப்டரானது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதுடன். அதன் சேதமடைந்த பாகங்களை லிபிய தேசிய தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் குறித்த ஆளில்லா ஹெலிகொப்டரானது வேவு பார்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இக் ஹெலிகொப்டர்  வீழ்ந்ததற்கான காரணங்கள் தொடர்பாக நேட்டோ ஆராய்ந்து வரும் அதேவேளை, வேறு ஹெலிகொப்டர்கள் எவையும் சுட்டுவீழ்த்தப்படவில்லையென நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...