மூன்றாம் கண்.,: அ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது, லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு

Pages

Saturday, June 18, 2011

அ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது, லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு



அ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக, லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கேபிள், "டிவி' அரசுடமை,
இலவச, "லேப்-டாப்', இலவச அரிசித் திட்டத்திற்கும் மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியின், "தேனிலவு' செயல்பாடுகள் குறித்து, சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம், தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பின் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 650 மீனவர்கள் உட்பட, 3,132 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., வெற்றிக்கு மக்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணமும் (44.2 சதவீதம்), தி.மு.க., குடும்ப ஆதிக்கமும் (32.1) தான் முக்கிய காரணம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது தான் (52.8) தே.மு.தி.க., வெற்றி பெறக் காரணம் என மக்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப ஆட்சி (49.7 சதவீதம்), லஞ்சம், ஊழல் (42.9 சதவீதம்), ஸ்பெக்ட்ரம் முறைகேடு (31.5 சதவீதம்), மின் வெட்டு (27.8 சதவீதம்), விலைவாசி உயர்வும் (20.7 சதவீதம்) தி.மு.க.,வை தோல்வியடைய வைத்துள்ளன. ஈழப் பிரச்னையில் இரட்டை வேடமே காங்., தோல்விக்கு காரணம் என 61.5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தி.மு.க., - காங்கிரஸ் உறவு முறியும் என 36.7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  அ.தி.மு.க., ஆட்சியின் ஆரம்பக் கட்டச் செயல்பாடுகள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தலைமைச் செயலகம் இடம் மாற்றத்தை 66.1 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் 67.5 சதவீதமும், இலவச, "லேப்-டாப்' திட்டத்திற்கு 84.7 சதவீதம் பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேபிள், "டிவி' அரசுடமையாக்கும் முடிவுக்கு 91.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. புதிய அமைச்சர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது என 72.9 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றும்; ஜெயலலிதா மனது வைத்தால் நிச்சயம் முடியும் என 54.5 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இலங்கை பிரச்னையில் அரசின் முடிவுக்கு 81.5 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. முக்கிய பிரச்னைகளாக மின் வெட்டு, விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வித் திட்டத்தில் அரசின் செயல்பாட்டை குறை கூறியுள்ள மக்கள், குறைபாடுகளை நீக்கி அமல்படுத்த வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ராஜநாயகம் கூறினார்.









Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...