மூன்றாம் கண்.,: ஆப்கன் ஹோட்டலில் தாக்குதல் இடையே 4 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை

Pages

Wednesday, June 29, 2011

ஆப்கன் ஹோட்டலில் தாக்குதல் இடையே 4 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 6 பேர் ஆகியோர் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் முற்றுகையிட்ட ஹோட்டலின் கூரை மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் ராக்கெட்டுகளை வீசியதையடுத்து புதன்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.இந்த ஹோட்டலுக்கு ஆப்கன் அதிகாரிகளும், வெளிநாட்டுப் பார்வையாளர்களும் அடிக்கடி வந்து செல்வர் என்று ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் செடிக் செடிக்கி தெரிவித்தார். தற்கொலைப் படையைச் சேர்ந்த 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.  2 பேர் ஹோட்டல் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டனர்.  இதர 4 பேர் அவர்களாகவே வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்திருக்கலாம் அல்லது ஆப்கன் படையினரின் விமானத் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...