நான்காவது ஐ.பி.எல். போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதன் மூலம் சென்னை சுப்ப கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆவது தடவை ஐ.பி.எல். கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. 4 ஆவது ஐ.பி.எல். ருவென்ரி20 இல் நேற்று சென்னையில் நடைபெற்ற
இறுதியாட்டத்தில் சென்னை சுப்ப கிங்ஸ் அணி பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 53 ஓட்டங்களால் தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. மிகவும் பரபரப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட இறுதியாட்டம் ஒரு தரப்பு ஆட்டமாகவேயிருந்தது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய சென்னை அணி மிகச் சிறப்பாக ஆடி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப துடிப்பாட்ட வீரர்களான முரளி விஜயும் மைக்ஹஸியும் மிக அற்புதமாக ஆடி முதல் விக்கெட் ஜோடியாக 14.5 ஓவரில் 159 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் .துடுப்பாட்டத்தில் முரளி விஜய் 52 பந்தில் 95 ஓட்டங்களையும் (4 பவுண்டரி, 6 சிக்ஸர்), மைக் ஹஸி 45 பந்தில் 63 ஓட்டங்களையும் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) கப்டன் தோனி22 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் கிறிஸ் கெய்ல், அரவிந்த் தலா 2 விக்கெட்டையும் முஹமட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.இதையடுத்து மிகவும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய றோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாயிருந்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கிறிஸ் கெய்ல் ஓட்டமெதுவும் பெறாது அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து பெங்களூர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்று 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 10 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்ற பெங்களூர் அணி மேலும் 2 விக்கெட்டை இழந்து 20 ஓவரில் 147 ஓட்டங்களைப் பெற்றது. இதில் திவாரி ஆட்டமிழக்காது42, ஹோலி35 சஹிர்கான்21, டி வில்லியர்ஸ்18 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் அஸ்வின் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டையும் ஜகர்த்தி2, பிராவோ, போலிஞ்சர், ரெய்னா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.ஆட்டநாயகனாக முரளி விஜய், ஆட்டத் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment