ஐநாநிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக அணிசேரா நாடுகளை திருப்புவதற்கு இலங்கை அரசு தனது முழு வளங்களையும் பயன்படுத்தி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன இந்தோனேசியாவில் எதிர்வரும் 25 ஆம் நாள் தொடக்கம் 27 ஆம் நாள் வரை அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்று அமைச்சர்களைக் கொண்டகுழு ஒன்று
பயணமாகவுள்ளது. இலங்கை அரசதரப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரீஸ், அமைச்சர்களான நிமால்சிறீபால டிசில்வா, தினேஸ்குணவர்த்தனா, ஜோன் செனிவரத்தினா ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனாவும் இந்தோனேசியா செல்லவுள்ளனர். ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் இலங்கை மீதான தீர்மானத்தை முறியடிப்பதற்கே சிறீலங்கா அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.எதிர்வரும் 31 ஆம் நாள் இலங்கை மீதான தீர்மானம்முன்வைக்கப்படலாம் என கருதப்படுகின்றது. இதனிடையே, ஜெனீவாவில் உள்ள இராஜதந்திரிகளை சந்திப்பதற்கு அமைச்சர் மகிந்தா சமரசிங்கா தலைமையிலான மற்றுமொரு குழு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழுவில் சிறீலங்காவின் நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீசும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment