மூன்றாம் கண்.,: கனிமொழியை சிறையில் கருணாநிதி சந்தித்தார்

Pages

Monday, May 23, 2011

கனிமொழியை சிறையில் கருணாநிதி சந்தித்தார்



டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியை அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது
செய்யப்பட்டு,கடந்த 20-ம் தேதி கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கம்போல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. பின்னர் சிறையில் அவர் கருணாநிதியை சந்தித்திருந்தார். அதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத்குமார் ஆகியோரையு்ம் கருணாநிதி சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனிமொழியைப் பார்த்த பிறகு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிய கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழியின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஷரத்குமார் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 ஐவர் ஜாமீன் மனு நிராகரிப்பு

 இதனிடையே, அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் தொழி்ல் நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து முக்கியப் பிரமுகர்களின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது. யுனிடெக்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி மேலாண் இயக்குநர் கெளதம் தோஷி, ரிலையனஸ் நிறுவன அதிகாரி ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா மற்றும் டி.பி. ரியால்டி உரிமையாளர் வினோத் கோயங்கா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் ஆதாரமற்றவை என்று கூறி, நீதிபதி அஜித் பாரிஹோக் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இன்னொரு புறம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டடுள்ள சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கனிமொழி, ஷரத்குமாருடன், கரிம் மொரானியும் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார்.







Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...